கடலூர் விபத்து.. "வடமாநிலத்தவரை பணியமர்த்தியதே காரணம்" – சீமான்!

கடலூரில் இன்று வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும் என நாம் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.  

PPL2: ஆகாஷ் அதிரடி.. வில்லியனூர் மொஹித் கிங்ஸுக்கு 2வது வெற்றி!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 08) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் … Read more

Mamitha Baiju: `விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன்' – சென்சேஷன் மமிதா பைஜுவின் லைன் அப்!

நடிகை மமிதா பைஜு தான் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன். அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகி, பட்டாம்பூச்சியாய் படப்பிடிப்புகளுக்கு பறந்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ப்ரேமலு திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து, மமிதா பைஜுவை பலருக்கும் பேவரைட்டாக்கியது. Mamitha Baiju About Vijay இத்திரைப்படம் வெளியான அடுத்த சில மாதங்களிலேயே பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கிவிட்டார். தற்போது மமிதா பைஜுவின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் விவரங்களைப் … Read more

பிட்சாட் : இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலி… அறிமுகம் செய்கிறார் ஜாக் டோர்சி

இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இணையம் இல்லாமல், செயற்கைக்கோள் இணைப்பு இல்லாமல், வைஃபை இல்லாமல் வேலை செய்யக்கூடிய இந்த புதிய மெசஞ்சர் செயலியை டோர்சி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிட்சாட் (BitChat) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த P2P மெசஞ்சர் செயலி தற்போது, ​​ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சோதனை முறையில் மட்டுமே கிடைக்கிறது. BitChat சோதனை முறையில் பலர் அரட்டை அடிக்கும் ஸ்கிரீன்ஷாட்கள் … Read more

கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு

கடலூர், கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல … Read more

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கும் மற்றொரு தமிழக வீரர்

லண்டன், தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி சாய் கிஷோர் இங்கிலாந்தை சேர்ந்த சர்ரே கவுண்டி அணிக்காக விளையாட உள்ளார். அதில் அவர் சர்ரே அணிக்காக அடுத்த இரு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் களம் காண உள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் போன்ற தமிழக வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சாய் கிஷோரும் விளையாட … Read more

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

தெஹ்ரான், காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் … Read more

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார். போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்த அந்தப் பெண், தாங்கள் இருவரும் 5 வருடம் ரிலேஷன்ப்பில் இருந்ததாகவும், குடும்பத்தினரிடம் மருமகள் அறிமுகம் செய்து வைத்ததால் அவரை முழுமையாக நம்பியதாகப் புகாரில் குறிப்பிட்டு, திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். … Read more

கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம், அன்புமணிக்கு கண்டனம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்

திண்டிவனம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை பாமக செயற்குழு நிறைவேற்றியுள்ளது. தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், பாமக மாநில … Read more

அகமதாபாத் விமான விபத்து: அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். … Read more