ஓய்வுக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை: வழக்கமான பணிகளை தொடர்கிறார்

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகிறார். இன்று முதல் அவர் வழக்கமான பணிகளைத் தொடர்வார் என்றும், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் … Read more

தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான தீவிரவாதிகள் கிடைக்கும்போது அவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று எனக்கு நாடு முழுவதிலும் பொது மக்களிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தன. தீவிரவாதிகள் இருப்பிடம் கண்டறியப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தற்செயலாக அந்த மூவரும் தலையில் சுடப்பட்டே இறந்தனர். பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் … Read more

25 சதவீதம் வரி: "இது அமெரிக்காவின் மிரட்டல்.. பிரதமர் மோடி பயப்படக்கூடாது.." – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷிய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை வெளியிட்ட அறிக்கையில், “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி விதிப்பை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை போன்று. … Read more

ஆடுகளத்தை பார்வையிட பயிற்சியாளருக்கு எல்லா உரிமையும் உண்டு: கம்பீருக்கு சுப்மன் கில் ஆதரவு

லண்டன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், லண்டன் ஓவல் பிட்ச் பராமரிப்பாளர் லீ போர்டிசுக்கும் இடையே நேற்று முன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. ஆடுகளத்தை 2.5 மீட்டர் தூரம் தள்ளி நின்று மட்டுமே பார்வையிட வேண்டும் என அவர் விதித்த கட்டுப்பாடு மற்றும் இந்திய வீரர்களின் பயிற்சி செய்த விதத்தை குறை கூறியதால் கடுப்பான கம்பீர், ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்ல தேவையில்லை. உங்களது வேலையை மட்டும் பாருங்கள்’ என்று … Read more

பூமி மீது நவம்பரில் வேற்று கிரகவாசிகள் படையெடுப்பு…? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

நியூயார்க், ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பது நீண்டகால விவாத பொருளாக உள்ளது. ஒருவேளை ஏலியன்கள் இருக்கும் என்றால், அவை உருவில், அளவில் எப்படி இருக்கும்? மனிதர்களை போன்ற வடிவை கொண்டிருக்குமா? அல்லது வேறு ஏதேனும் வடிவத்துடன் இருக்குமா? அவற்றின் சக்தி எந்தளவுக்கு இருக்கும்? என்பன போன்ற பல மர்ம முடிச்சுகள் அவிழாமல் உள்ளன. இந்நிலையில், பூமியின் மீது வருகிற நவம்பரில் மர்ம விண்வெளி பொருள் ஒன்று தாக்கம் ஏற்படுத்த போகிறது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி … Read more

கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 2011-12ல் 85,649-ஆக இருந்த வணிக உரிமங்களின் எண்ணிக்கை, பழனிசாமி ஆட்சியில் 2020-21ல் 2,05,100 ஆக உயர்ந்தது. அதேபோல, 2011-12ல் ரூ.5.40 கோடியாக இருந்த உரிமக் கட்டணம் பழனிசாமி ஆட்சியில் ரூ.12.90 கோடியாக உயர்ந்தது. ஒவ்வொரு … Read more

ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு

புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு தப்பியோடுவது முறியடிக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். … Read more

கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பிறகு ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை தாக்கிய சுனாமி

டோக்கியா: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் கம்சாத்கா தீபகற்பத்தில் கட்டிடங்கள் குலுங்கின. ஜப்பானின் ஹொக்கைடோ தீவிலிருந்து 250 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வரலாற்றில் பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. இது தொடர்பான காட்சிகள் நேற்று … Read more

ஆபரேசன் மகாதேவ்-ஐ தொடர்ந்து ஆபரேசன் சிவசக்தி, இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர்…

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற பெயரில் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ஆபரேசன் சிவசக்தி நடவடிக்கையின் மூலம் இந்திய  ராணுவ வீரர்கள்  இன்று (புதன்கிழமை காலை … Read more

ரஷியா, சீனா,ஜப்பான்,அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்

டோக்கியோ, ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. ரஷியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரஷியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, பெரு, ஈக்வடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கிரசென்ட் சிட்டி, யுரேகா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சுனாமி எச்சரிக்கையை அடுத்து ஜப்பான் பசிபிக் கடற்கரையோரம் … Read more