வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய திட்டங்கள் தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியது: “வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக பணியில் சேர உள்ளவர்களுக்கும், அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஆதரவு … Read more

“இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

Parandhu Po Movie Will Be Massive Success : ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது. இந்த படம் பெரிய வெற்றி அடையும் என அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கூறுகிறார்.

ரிதன்யாவின் கடைசி தருணங்கள்! கதறிய தாய்.. என்ன நடந்தது? -முழு விவரம்

Rithanya Last Moments: டார்ச்சர் மற்றும் துன்புறுத்தல் குறித்து ஒரு காணொலி வாக்குமூலம் அனுப்பிய ரிதன்யா. கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவியை போலீசார் கைது செய்தனர்.

IND vs ENG: நாளை தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்.. வானிலை & பிட்ச் எப்படி இருக்கு?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி கடந்த 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.  இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்தியாவே வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் போட்டியின் … Read more

Maargan: 'அந்தக் கதையைக் கேட்டு அழுதேன்' – மார்கன் பட விழாவில் விஜய் ஆண்டனி பேசியது என்ன?

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர்  நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் ‘மார்கன்’. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று ( ஜூலை 1) நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, “ நிறைய வெற்றி படங்கள், தோல்வி படங்களைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. மார்கன் எந்த ஒரு படமும் ஹீரோவால் ஓடாது. கடவுளே வந்து நடித்தால் கூட … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்க்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்ரு முதல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து … Read more

ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று முதல் அமல்

சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, ‘தட்கல்’ எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், ‘சர்வர்’ முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் … Read more

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு

பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த … Read more

மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம்

நய்பிடாவ், மியான்மரில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.14 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.92 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.39 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை 1 More update … Read more

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" – ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அஜித்குமாரின் மரணத்துக்குப் பிறகான எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு … Read more