“கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் … Read more

மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒலி பெருக்கிகளின் ஒலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மசூதிகளின் பாங்குகளை செயலி மூலம் கைப்பேசிகளில் ஒலிக்கத் துவங்கி உள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை தொழுவதை தம் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இந்த தொழுகைக்கு சற்று முன்பாக அதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் அசான் என்றழைக்கப்படும் பாங்கு ஓசை ஒலிப்பதும் பல காலமாகத் தொடர்கிறது. இதில், முதல் தொழுகையான விடியலில் சூரிய உதயம் … Read more

அஜித் குமார் மரணம்.. கைதான 5 போலீசார் குடும்பத்தினர் தர்ணா!

அஜித் குமார் வழக்கில் கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல்நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குட் டே விமர்சனம் : ஓர் இரவின் கலவரமும், அதனுள் மறைந்திருக்கும் மனிதத்தின் பயணமும்

திருப்பூரின் பரபரப்பான ஜவுளித் தொழிற்சாலையில், சூப்பர்வைசராக இருக்கிறார் சாந்தகுமார் (பிருத்விராஜ் ராமலிங்கம்). அவரது மோசமான ஒரு நாளில், பணியிடத்தில் மேலாளரால் ஏற்படும் அவமானம், தொலைபேசியில் மனைவியின் வசைபாடுதல் ஆகியவை மன அழுத்ததுக்குக் கொண்டு செல்ல, தனது அறையில் தனியாக மது அருந்துகிறார். அதன்பின்பு போதையினால் ஏற்பட்ட விளைவால், வீட்டு உரிமையாளரிடம் சண்டை, முன்னாள் காதலிக்கு தொலைபேசியில் அழைப்பு என அடுக்கடுக்காக அலப்பறைகளைக் கூட்டுகிறார் சாந்தகுமார். இதன்பின்னர், அந்த ஓர் இரவில் நடக்கும் நிகழ்வுகள், அவர் வாழ்வில் என்ன … Read more

தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மார்க்கெட்

காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/   ஏற்கனவே காஞ்சிபுரத்தில் ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.  கடந்த 2023-ம் ஆண்டில் இந்த மார்க்கெட் புதுப்பிக்க ரூ.4.6 கோடி … Read more

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம் | Automobile Tamilan

கியா இந்தியாவில் தயாரித்துள்ள காரன்ஸ் கிளாவிஸ் EV (Carens Clavis) எம்பிவி ரக மாடல் 51.4Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 490கிமீ கொண்டதாக விற்பனைக்கு ஜூலை 15 ஆம் தேதி வரவுள்ளது. 7 இருக்கை கொண்ட கேரன்ஸ் எலக்ட்ரிக் மாடலில் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி காரில் உள்ள பேட்டரி பேக்கினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா கிளாவிஸ் இவி மாடல் 51.4Kwh பேட்டரி பேக் 490 கிமீ வெளிப்படுத்தும் என டீசர் மூலம் … Read more

“தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

கோவை: “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம் 63.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்து ரத்தினம், செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை சார்ந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 45 … Read more

பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

புதுடெல்லி: பெண்களை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதற்கான செலவு 2025 – 26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என கிரிசில் ரேட்டிங்ஸ் எனும் தனியார் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு முறை தேர்தலிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான வாக்குறுதிகளை அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. இதன் பின்னணியில் பெண்களின் வாக்குகளால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்குப்பதிவு செய்ய … Read more

‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

வாஷிங்டன்: உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு ‘அது குறித்து பார்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் என இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு நேரடியாக உதவி இருந்தார் மஸ்க். அந்த நட்புறவு அண்மையில் முறிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு … Read more