வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது

வாஷிங்டன், கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக வேண்ட்ஸ்வொர்த் சிறையில் … Read more

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' – முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் மிகப் பெரிய பேரணியை நடத்துவோம் என அறிவித்தனர். … Read more

“இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டியத்தின் எழுச்சி…” – முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்

சென்னை: “இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் … Read more

“புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” – தலாய் லாமா

தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “ அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக … Read more

பட்ஜெட் விலையில் டெக்னோ Pova 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova 7 மற்றும் … Read more

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்'! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாரீசன் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று வெளியாகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது.

Chiyaan 63: 'எனக்கு நெருக்கமான படம் இது; ரசிகர்கள் திட்டுகிறார்கள்!' – அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் எஸ்.யூ. அருண் குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே அவருடைய 63-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருந்தது. Veera Dheera Sooran ‘மாவீரன்’, ‘3 BHK’ ஆகியப் படங்களைத் தயாரித்த அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்திருந்தது. ஆனால், … Read more

தமிழ்நாட்டில் 9ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தலைமைச்செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதைத்தொடர்ந்து, ஜுன் 24ந்தேதி  தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் … Read more

இன்னும் 40 ஆண்டுகளுக்குமேல் வாழ ஆசைப்படுகிறேன் – தலாய் லாமா

தர்மசாலா, இந்தியாவின் அண்டை நாடு தீபெத். இந்நாடு 1959ம் ஆண்டு முதல் சீனாவின் கடுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டை சேர்ந்த புத்த மத தலைவர் தலாய் லாமா சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தார். அவருடன் புத்த மதத்தை சேர்ந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இவர்கள் இமாச்சலபிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனிடையே, புத்தமத தலைவரான தலாய் லாமா நாளை தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் … Read more