“பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

திருச்சி: “தேசிய ஜனநாயகக் கூட்டணியை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டு நடத்தி வருகிறார். முதல் கட்ட பிரச்சாரப் பயணம் நிறைவடைந்த நிலையில், 2-ம் கட்ட பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று … Read more

“பிஹார் தேர்தலுக்குப் பிறகும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார்” – சிராக் பாஸ்வான் நம்பிக்கை

பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், “தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. பிரதமர் மீது எனக்கு அர்ப்பணிப்பும் அன்பும் உள்ளது என்பதை நான் பலமுறை மீண்டும் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையிலேயே பிஹாரில் தேர்தல் … Read more

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை ,சிதம்பரம் வட்டம்.

சிந்தமணியம்மன் திருக்கோயில், கிள்ளை ,   சிதம்பரம் வட்டம். தல சிறப்பு : சித்திரை முதல் வாரத்தில் அம்மன்மீது சூரியஒளி விழு கிறது. பொது தகவல் : கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. விமானத்தில் ஒரு கலசம், நுழைவு வாயில், முன் உள்ள மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். பலிபீடம், பலிபீடத்தில் சிம்மம் அருகில் குலம் உள்ளது. இடபக்கம் வேல் முருகன், வலப்பக்கம் விநாயகர், கிழக்குப் பக்கம் பார்த்து பேச்சியம்மன் தனி சன்னிதியிலும், காத்தவராயன், சிவப்பழகி. கருப்பழகியுடன் … Read more

ஜனாதிபதி எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை ஆக.19ல் தொடங்கும் – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி நீண்டகாலம் கிடப்பில் போட்டு இருந்தார். இதனால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர் ஒரு மாதத்துக்குள்ளும், கவர்னர் அனுப்பிவைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியில் அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்..?

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் … Read more

அமெரிக்காவில் போயிங் ரக விமானத்தில் பழுது: அவசர அவசரமாக தரையிறக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதைக்கவனித்த விமானிகள், உடனடியாக வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விமானிகள் ” மே டே” அறிவித்தனர். மே டே என்பது விமானம் கடுமையான ஆபத்தில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் சர்வதேச அவசர அழைப்புச் சொல் ஆகும். மேடே அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தை உடனடியாக தரையிறக்க … Read more

மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

மதுரை: மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். காவல் துறை அனுமதியை விரைந்து வழங்கவும் எஸ்பியிடம் அவர் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு 25-ல் மதுரையில் நடத்துகிறது. இதற்காக மதுரை – தூத்துக்குடி சாலையில் 506 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பந்தல் கால் நடத்தப்பட்டு மாநாட்டுக்கான மேடை, பந்தல், பார்வையாளர்கள், பார்க்கிங் கேலரிகள் … Read more

பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதனை!

புதுடெல்லி: பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நேற்றும் இன்றும் (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. … Read more

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…

திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால்  மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவர் திருச்சி விமான … Read more

மாணவியிடம் 'ஐ லவ் யூ' என கூறியதாக தொடரப்பட்ட வழக்கு – ஐகோர்ட் கருத்து

ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டத்தில் உள்ள குரூட் காவல் நிலையப் பிரிவில் 15 வயது சிறுமி ஒருவர், தான் வீட்டிற்குச் செல்லும் வழியில் இளைஞர் “ஐ லவ் யூ” என்று சொன்னதாகவும், இதற்கு முன்பும் பலமுறை தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இருப்பினும், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு … Read more