3BHK விமர்சனம்: மிடில்கிளாஸ் போராட்டத்தின் வலி; டிராவிட் ஃபேனும், தோனி ஃபேனும் வென்றார்களா?

சென்னையில் ஒரு லோடு கம்பெனியில் கணக்கராகப் பணிபுரியும் வாசுதேவன் (சரத்குமார்), தனது மனைவி சாந்தி (தேவயானி), மகன் பிரபு (சித்தார்த்), மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்) ஆகியோருடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மொத்த குடும்பமும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நெஞ்சில் சுமந்து ஓடுகிறது. அதற்கான சேமிப்புத் திட்டங்களும் போடப்படுகின்றன. ஆனால் நடுத்தர வர்க்கத்தின் இத்யாதி பிரச்னைகள் அவர்களின் சேமிப்பைக் காலி செய்கின்றன. இதற்கு மத்தியில் இவர்கள் கனவு ஜெயித்ததா என்பதை உணர்வுபூர்வமான … Read more

தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தை தொடங்குவது எப்படி? முழு விவரம்

How to Start TN eSevai Center : தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது (TNeGA) “அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின்” கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இசேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இ-சேவை மையங்கள் … Read more

இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்! பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்  என இந்திய  கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இருப்பினும்,  இந்த … Read more

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது | Automobile Tamilan

2025 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 மற்றும் டோமினார் 250 என இரண்டின் மேம்பட்ட மாடல்கள் அடுத்த சில நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் வெளியான பல்சர் என்எஸ் 400 மாடலின் எஞ்சின் உட்பட பெரும்பாலான வசதிகளை பகிர்ந்து கொள்ள உள்ளது. குறிப்பாக, எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் உடன் புதுப்பிக்கப்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெற்றிருக்கலாம். குறிப்பாக, தற்பொழுது பெட்ரோல் டேங்கில் உள்ள கிளஸ்ட்டர் அமைப்பு நீக்கப்படலாம். மற்றபடி … Read more

ட்ரம்பின் தொலைபேசி அழைப்பு; “அவர் கோபப்படுவார்..'' – கூட்டத்தை பாதியில் விட்டு கிளம்பிய புதின்!

ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் போன்கால் பேச்சுவார்த்தை – இது சமீபகாலம் தொடர்கதை ஆகும். நேற்றும் ட்ரம்ப் – புதின் இருவரும் தொலைபேசியில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டதை விட, அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது தான் ஹைலைட்டான விஷயமாக தற்போது பேசப்பட்டு வருகிறது. ட்ரம்ப் – புதின் நேற்று, புதின் ‘ஸ்ட்ராங் ஐடியாஸ் ஃபார் நியூ … Read more

லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

சென்னை: லாக்-அப் உயிரிழப்புகள், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறினார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லாக்-அப் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பொதுமக்களுக்கு போலீஸார் தரும் தொந்தரவுகள் குறித்து, முதல்வர் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரதட்சணை கொடுமையால் தமிழகத்தில் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குவது மட்டுமல்ல, … Read more

பாஜக தேசியத் தலைவராக பெண் ஆளுமை; ஒப்புதல் அளித்த ஆர்எஸ்எஸ்: ரேஸில் முந்தும் நிர்மலா சீதாராமன்!

பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர். பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023-ம் ஆண்டே முடிந்துவிட்டது. … Read more

உக்ரைன் உடனான போரை புதின் நிறுத்துவார் என தோன்றவில்லை: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன்.” என வாக்குறுதி அளித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இரண்டாவது முறையாக டொனால்ட் டரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், … Read more

3BHK, ஃபீனிக்ஸ், பறந்து போ: 3ல் எது டாப்? எது Flop? ரசிகர்களுக்கு பிடித்த படம் எது?

3BHK Parandhu Po Phoenix Which Is Worth : ஜூலை 4ஆம் தேதியான இன்று ஒரே நாளில் 3 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில், எந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன தெரியுமா? இதோ விவரம்!  

What to watch on Theatre: 3BHK, பறந்து போ, Phoenix, Jurassic World; இன்னைக்கு இத்தனை படங்கள் ரிலீஸா!

பறந்து போ (தமிழ்) பறந்து போ இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் … Read more