கிரானைட் முறைகேடு வழக்கு: சகாயம் ஜூலை 21-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஜூலை 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டது. தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன் இன்று … Read more

அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 44 பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது … Read more

TNPSC Group 4 Hall Ticket: குரூப்-4 ஹால் டிக்கெட் எப்போது வரும்? டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group-4 Hall Ticket Download: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின் ஹால் டிக்கெட் எப்போது வரும், எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Ind vs Eng: சதத்தை தவறவிட்டு.. ரெக்கார்ட்டை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்! ஆனா ரோகித்தின் சாதனை காலி

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (ஜூலை 2) இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது ஜன்னல் சட்டம் தளர்ந்தது… பயணிகள் பீதி…

கோவா-புனே இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டம் தளர்ந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். கோவாவிலிருந்து இன்று புனேவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தபோதிலும், பயணம் முழுவதும் கேபினில் அழுத்தம் சீராக இருந்தது என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு காயமோ அல்லது பெரிய பிரச்சினைகளோ இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய கோகோ காப்

லண்டன், ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ … Read more

Vijay : 'கொடூரமா இருக்கு… இப்படி நடக்கவே கூடாது!' – அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதரரிடமும் விஜய் எமோஷனலாக பேசியிருக்கிறார். விஜய் தவெக சார்பில் அஜித்தின் காவல் மரணத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர். இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் … Read more

“நாங்கள் துணை நிற்போம்…” – அஜித்குமாரின் தாய், தம்பியிடம் போனில் பழனிசாமி ஆறுதல்

சென்னை: “துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்” என்று அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆறுதலாக பேசினார். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று (ஜூலை 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அதிமுக … Read more

புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’ – ப.சிதம்பரம் முன்வைக்கும் காரணம்

புதுடெல்லி: ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களே மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் என்று மத்திய அரசு பலமுறை கூறி வருகிறது. ஆனால் உண்மையிலிருந்து … Read more

அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய எங்களது ஒப்புதல் அவசியம்: சீன அரசு திட்டவட்டம்

பீஜிங்: அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்குமான பொறுப்பு காடன் போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களையே சாரும் என தலாய் லாமா இன்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் நடைமுறையில் தங்களது ஒப்புதலைப் பெறுவது முக்கியம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பீஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் … Read more