முதல்வர் வேட்பாளர் விஜய் – தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை! தவெக கூட்டத்தில் விஜய் அறிவிப்பு…

சென்னை:  விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி … Read more

இது இந்தியா வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் – இந்திய முன்னாள் கேப்டன்

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் … Read more

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Vida VX2 மின்சார ஸ்கூட்டரின் அறிமுக சலுகையில் ரூ.44,490 க்கு BaaS (Battery-as-a-Service) திட்டத்தில் வாங்குபவர்களுக்கு நீட்டிக்கப்ப்ட்ட வாரண்டி, 70% குறைவாக பேட்டரி திறன் சென்றால் இலவசமாக பேட்டரியை மாற்றித் தரப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. VIDA VX2 BaaS குறிப்பாக, அறிமுகத்தின் பொழுது  VX2 BAAS திட்டத்தின் கீழ் ரூ.59,490 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கிமீ பயணித்தின் பொழுது 0.96 பைசா வசூலிக்கப்படும் என உறுதிப்படுத்தியது, தற்பொழுது தனது X … Read more

தென்காசி: மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை; 6 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது!

தென்காசி, கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையோர மாவட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான கஞ்சா கடத்தி வருவதாகவும் அல்லது மலைப்பகுதியில் விளைவிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கிருந்து கடத்தி வரப்படும் கஞ்சா செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. கஞ்சா விற்றவர்கள் இதனை அடுத்து எல்லையோர மாவட்டங்களில் … Read more

‘2026 ஜனவரி முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்படும்’

மதுரை: ‘‘வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்பட தொடங்கும்’’ என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஹனுமந்தராவ் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தோப்பூரில் மும்முரமாக நடக்கிறது. சமீபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் 3டி வீடியோ வெளியாகி, பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, இன்னும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்தக் கல்லூரியை மதுரைக்கு … Read more

“போர் போன்ற இயற்கைப் பேரிடர் இது..!” – இமாச்சல் முதல்வர் ஆதங்கத்துடன் விவரிப்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் 69 பேர் உயிரிழந்ததாகவும், ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், மாநிலம் ‘போர் போன்ற இயற்கைப் பேரிடரை’ எதிர்த்து போராடுவதாகவும் அவர் கூறினார். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டமன்ற துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங், “தற்போதைய இயற்கைப் பேரிடரால் … Read more

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? – ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை

பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும். அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டுமே பல்துறை பிரபலங்களும் தர்மசாலாவுக்கு … Read more

Suresh Raina: "இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்!" – ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா!

ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. சுரேஷ் ரெய்னா இதுவரை சின்ன சின்ன விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் ரெய்னா. பாலிவுட்டை தாண்டி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதே சுரேஷ் ரெய்னாவின் விருப்பமாக இருக்கிறது. Suresh Raina ரெய்னா நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகன் இயக்குகிறார். DKS என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் திரைப்படமாக இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு நிகழ்வு இன்று … Read more

பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்! தவெக செயற்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆவேசம்…

சென்னை:  பரந்தூர் மக்களை நானே தலைமைச்செயலகம் அழைத்து வந்து முற்றுகையிடுவேன்  என்றும், அப்போது  எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக கூறினார். விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்  என்றும்,  தி.மு.க – பா.ஜ.கவுடன் என்றுமே கூட்டணி இல்லை என்று  தவெக கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2026 பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து … Read more

குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ; ஒருவர் பலி

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்தார் தர்சிம் சிங். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டிஎஸ்பி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தர்சிம் சிங்கிற்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு மகன், மருமகள் இருந்தனர். இதனிடையே, தர்சிம் சிங்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், அமிர்தசரசின் மஜத் சாலை பகுதியில் உள்ள வீட்டில் தர்சிம் சிங்கின் முதல் மனைவி, மகன், மருமகளுடன் வசித்து … Read more