2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றிய சிராஜ்.. ஸ்டோக்ஸ் கோல்டன் டக்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

வாஷிங்டன், உக்ரைன் -ரஷியா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா உடன்படவில்லை என்றால் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இதனிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி … Read more

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான டூரிங் ஸ்டைலை பெற்ற டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மாடல்கள் முறையே ₹2,38,682 மற்றும் ₹1,91,654 எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 டோமினார் வரிசையில் Road, Rain, Sport, மற்றும் Off-Road என 4 விதமான முறைகளை பெற்ற ஏபிஎஸ் மோடு, புதுப்பிக்கப்பட்ட ரைடிங் அமைப்பினை மேம்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உடன் புதிய எல்சிடி கிளஸ்ட்டர் மேம்பட்ட திரையுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை … Read more

Vijay: 'தலைமைச் செயலகம் போக விஜய் மட்டும் தேதி குறிக்கட்டும்….! – பரந்தூர் விவசாயிகள் ரியாக்சன்

‘பரந்தூருக்கு ஆதரவாக தீர்மானம்!’ தவெக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். நிகழ்வில் பரந்தூர் சம்பந்தமாக விஜய் வாசித்த தீர்மானம் கவனம் பெற்றிருந்தது. ‘1500 குடும்பம்தான்னு சொல்றீங்க. அவங்களும் நம்ம மக்கள்தானே.’ என பரந்தூர் மக்களுக்கு ஆதரவாகப் பேசிய விஜய், Vijay ‘விமான நிலையத் திட்டத்தை கைவிடவில்லையெனில் பரந்தூர் விவசாயிகளைத் திரட்டி தலைமைச் செயலகத்துக்கு வந்து உங்களை சந்திக்க நேரிடும்.’ என்றார். விஜய்யின் பேச்சால் பரந்தூர் விமான நிலையம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. விஜய் நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்துக்கு … Read more

“திமுகவை வெறுப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” – நயினார் நாகேந்திரன் அழைப்பு

மதுரை: “திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலையை முதலில் வெளிப்படுத்தியது நான்தான். அதன் பிறகே மற்ற கட்சிகள் வந்தன. இப்போது அஜித்குமார் வீட்டுக்கு எல்லோரும் செல்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம், … Read more

தலாய் லாமா விவகாரம்: சீனாவுக்கு எதிர்வினையாற்ற கிரண் ரிஜிஜு மறுப்பு

புதுடெல்லி: தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உரியது என்றும், அவரது பக்தராக தான் இதை தெரிவிப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவின் அறிக்கைக்கு எதிர்வினையாற்ற நான் விரும்பவில்லை” என்றார். இது தொடர்பாக இன்று (ஜூலை 4) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நான் தலாய் லாமாவின் பக்தர். தலாய் லாமாவைப் பின்பற்றுபவர்கள் உலகில் எங்கு இருந்தாலும், அவர்களின் விருப்பம் ஒன்றுதான். தனது வாரிசை தலாய் லாமாவே … Read more

‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் and டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு … Read more

ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது … Read more

2025ல் இதுவரை 122 படங்கள் ரிலீஸ்! ஆனா..6 மட்டும் ஹிட்-என்னென்ன தெரியுமா?

Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 122 படங்கள் வரை ரிலீஸாகி இருக்கின்றன. ஆனால், அதில் 6 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அப்படி வெற்றிப்பெற்ற படங்கள் எவை தெரியுமா?  

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தமிழக தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமராஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.