அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி!

Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

CSK-க்கு சஞ்சு சாம்சன் வேண்டவே வேண்டாம்… 3 முக்கிய காரணங்கள் இதோ!

Chennai Super Kings: ஐபிஎல் 2025 சீசன் நிறைவடைந்து ஒரு மாதம் நெருங்கிவிட்டது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியும் அதன் முதல் கோப்பையை வென்றிருக்கிறது. பஞ்சாப் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிளே ஆப் சுற்றுக்கும், இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தது.  குஜராத், மும்பை, டெல்லி அணிகளும் சிறப்பாகவே விளையாடியிருந்தன. சன்ரைசர்ஸ் அணி கடைசி கட்ட போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து 6வது இடத்தில் நிறைவு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் எழுச்சியால் லக்னோ, கொல்கத்தா அணிகள் அடுத்தடுத்த … Read more

அஜித்குமார் விவகாரம்; நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொலை – M.S.பாஸ்கர் அடுக்கும் கேள்விகள்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலைய விசாரணையின் போது இறந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. அஜித் குமாரைத் தாக்கிய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்க்கும் பதிவில், ‘லாக்கப் கொலைகள், பழிக்குப்பழி கொலைகள், வரதட்சணை கொடுமை தற்கொலைகள், வயது பாராமல் மிருகத்தனமான பாலியல் குற்றங்கள், கொடூரமான கொள்ளை … Read more

RailOne : இந்த செயலி மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

RailOne App Features : இந்திய ரயில்வே துறை பொதுமக்கள் ரயில் தொடர்பான சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் ரயில் டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் ரயில் ஒன் செயலியை மத்திய அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Google Play Store மற்றும் Apple App Store இரண்டிலும் கிடைக்கும் இந்த ஆப், டிக்கெட் புக் செய்தல், ரயிலில் உணவு ஆர்டர் செய்தல், … Read more

கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா! கட்டுமானப் பணிக்கான டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

கோயமுத்தூர்: கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா  அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான கட்டுமானப் பணிக்கான டெண்டரை கோரியுள்ளது தமிழ்நாடு அரசு. கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில்,   ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா  கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கோவை குறிச்சியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரஅடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட … Read more

சமூகவலைதளம் மூலம் பழக்கம்… 30 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்த வடமாநில தொழிலாளி

புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் அவரது தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்டது மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் (வயது 39) என்பதும் புதுவையில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பதிலடி கொடுக்குமா இந்திய அணி..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் … Read more

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்தான், 60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போரில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் … Read more

மும்பை: பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை; ஆசிரியைக் கைது; விசாரணையில் பகீர் தகவல்கள்

மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் 11வது வகுப்பு படித்தபோது அவனது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் கண்காணித்த அவனது பெற்றோர் மாணவனிடம் தீவிரமாக விசாரித்தபோது நடந்த உண்மையைத் தெரிவித்தான். தனது பள்ளி ஆசிரியை தன்னை … Read more

குறைந்த ரயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: ரயில்களில் புறநகர் பயணக் கட்டணமும் , சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. ஒரு பயண கிலோ மீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா 2 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டது. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளி விவரங்களைப் பார்த்தால் புரியும். 2017-2018-ல் 824 கோடி பேரும், 2018 -2019-ல் 846 கோடி பேரும், 2018 -2019-ல் 846 … Read more