"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." – மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, “கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் … Read more

காசா மீதான தாக்குதல் முடிவுக்கு வருமா?.. டிரம்பை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜூலை 7 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் வரவேற்க திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்து, மீதமுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி இருந்தார். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று தனது மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்காக அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருப்பதாகவும், … Read more

அஜித்குமார் : `ஐஏஎஸ் உறவினரும் இல்லை; எந்த செல்வாக்கும் இல்லை; நாங்களே..!' – புகார் கொடுத்த நிகிதா

’’எங்கள் நகையைக் காணவில்லை என்றுதான் புகார் கொடுத்தேன். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும். இந்தப் பாவத்தை நாங்கள் எப்படி சுமப்போம் என்று நானும் அம்மாவும் கலங்கி அழுகிறோம். ஆனால், தி.மு.க பின்புலம், ஐ.ஏ.எஸ் உறவினர் என்றெல்லாம் எங்களைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள். தி.மு.கவினரிடம் ரூ.2 லட்சத்தை இழந்துள்ள எனக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரே நாளில் எங்கள் வாழ்க்கையே சுழலுக்குள் சென்றுவிட்டது’’ – –கலக்கமும் கண்ணீருமாகப் பேசுகிறார், நிகிதா. … Read more

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம்: அன்புமணி அதிரடி நடவடிக்கை

சென்னை: பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது … Read more

5 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: இன்று மாலை கானா அதிபருடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை இன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை கானா அதிபரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டினா மற்​றும் நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்​கொள்​கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டுச் … Read more

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – ட்ரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500% வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் இந்த புதிய மசோதாவை ஆதரித்து பேசிய அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், “இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ட்ரம்ப் என்னிடம் கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பேச்சுவார்த்தை மேஜைக்குக் கொண்டுவரும் … Read more

Kerala Lottery: ரூ.1 கோடி ஜாக்பாட் யாருக்கு? தனலட்சுமி லாட்டரி DL-8 குலுக்கல் இன்று..

Kerala Lottery Results (02-07-20250) Latest News: தனலட்சுமி லாட்டரி DL-8 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா குலுக்கல் முடிவுகளை அறிவிக்கவுள்ளது.

500 கோடி சொத்து.. ராஜா வாழ்க்கை! ஆனால் இன்று வீடு கூட இல்லை! நடிகர் சத்யனின் சோக கதை!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்தபோதிலும் தனது வித்தியாசமான நடிப்பால் பலரையும் கவர்ந்திருந்தார் நடிகர் சத்யன். குறிப்பாக நண்பன் படத்தில் அவரது காமெடி பலராலும் ரசிக்கப்பட்டது. 

அஜித்குமார் லாக்கப் மரணம்: தம்பி நவீனுக்கு அரசுப் பணி… நிவாரணம் கொடுத்த தமிழக அரசு!

Ajithkumar Lockup Death: காவல்துறை விசாரணையில் மரணமடைந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணியும், அவரது குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல! ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் ஆய்வு தகவல்கள்…

டெல்லி: திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு காரணம் கொரோனா தடுப்பூசியா என்பது குறித்து ஆய்வு செய்யப்போவதாக கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியுள்ள நிலையில்,  கோரோனா (கோவிட் 19) தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. COVID-க்குப் பிறகு பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து ICMR மற்றும் AIIMS மேற்கொண்ட விரிவான ஆய்வுகள், COVID-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் … Read more