ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல.. திட்டமிட்ட படுகொலை.. சீமான்!

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல;  இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த திட்டமிட்ட படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார். 

Ind vs Eng: இந்தியாவை அச்சுறுத்தும் ஹாரி புரூக் – ஜேமி ஸ்மித் கூட்டணி.. என்ன செய்ய போகிறது?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 02) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 587 ரன்களை அடித்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கினர்.  இதில் கேஎல். ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த கருண் நாயார் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். … Read more

Paranthu Po: "முதல்முறை என் படத்த பார்த்து சிரிச்சுட்டே வெளிய வர்றாங்க" – இயக்குநர் ராம் நெகிழ்ச்சி!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் நடந்தது. மகன் அன்புவின் சேட்டைகள். அதனுள் இருக்கும் சுதந்திர குணம் என சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லுவதாக இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. … Read more

இந்து குறித்து ஆபாச பேச்சு: பொன்முடி மீதான வழக்கில் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை:   இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு மீது உரியான விசாரணை செய்ய தமிழ்நாடு போலீசார் தயங்கினால், வழக்கை  சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிடுவோம் என உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறினார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்குகளில்  தமிழ்நாடு போலீசார் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்” என  சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாகசாடியதுடன், எச்சரிக்கையும் செய்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் பொன்மீது ஏராளமான வழக்குகள் … Read more

அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

புதுடெல்லி, அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனையில் சச்சினை முந்தி 2-வது இடம் பிடித்த சுப்மன் கில்

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 … Read more

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்

டோக்கியோ, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதன்படி அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேசமயம் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதற்காக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் … Read more

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" – உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் ஒன்று. ஆளுநர் தேவையற்ற கால தாமதம் செய்கிறார் எனக்கூறி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதனையடுத்து அந்த மசோதாக்களை சட்டமாக அரசிதழில் வெளியிட்டது … Read more

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை விரைவாக நடத்தப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தப்படும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், … Read more

ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI ) ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், “இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, … Read more