ஜனவரி முதல் ஜூன் வரை! இந்தியாவில் நடந்த முக்கியமான 10 செய்திகள்!

2025 தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அஜித்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல்.. ரூ. 2 லட்சம் நிவாரணம்!

காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இந்தியாவில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தவறிவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

யூரியா, டிஏபி உள்ளிட்ட அத்தியாவசிய உரங்கள் பற்றாக்குறையை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். “ஒருபுறம், பிரதமர் நரேந்திர மோடி உரப் பைகளில் தனது புகைப்படத்தை அச்சிடுகிறார், மறுபுறம், விவசாயிகள் ‘சீனாவில் தயாரிக்கப்பட்ட’ உரங்களைச் சார்ந்து இருக்கிறார்கள்,” என்று அவர் கேலி செய்தார். “இந்தியா ஒரு விவசாய … Read more

சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்

பெங்களூரு, கர்நாடக காங்கிரசில் குழப்பமான சூழல் நிலவு கிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்பதாக அறிவித்தார். அதன்படி நேற்று 2-வது நாளாக அவர் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அதாவது … Read more

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகராஜ் வழிநடத்துகிறார்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டியில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு … Read more

இன்ஸ்டா பயனர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த மெட்டா

செல்போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவர் மத்தியிலும் மொபைல் போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவும் செல்போன்கள் மாறிவிட்டன. இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களை கவரும் விதமாக புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலகின் … Read more

ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?

ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் … Read more

“அதிமுக, பாஜக இணைந்து போராடும்!” – திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

சிவகங்கை: “ஸ்டாலினை முதல்வர் பதவியில் இருந்து இறக்கும் வரை அதிமுக, பாஜக இணைந்து போராடும்” என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசினார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு திருப்புவனம் சந்தைபேட்டை அருகே அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “அஜித்குமார் குடும்பத்தினர் வாய் திறக்கவே பயப்படுகின்றனர். திமுக பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர். சாத்தான்குளத்துக்கு … Read more

பாஜகவில் மீண்டும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கு: புதியவர்களுக்கு பதவிகள் இல்லையா?

புதுடெல்லி: பாஜகவில் தேர்வாகி உள்ள புதிய நிர்வாகிகளுக்கு மீண்டும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் செல்வாக்கு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அக்கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இந்த பழம்பெரும் அமைப்பின் செல்வாக்கு அதன் அரசியல் பிரிவான பாஜகவில் துவக்கம் முதல் தொடர்ந்தது. 2014-இல் அமைந்த ஆட்சியில் பிரதமரான நரேந்திர மோடிக்கு, ஆர்எஸ்எஸ் உடன் கருத்து வேறுபாடுகள் உருவானதாகத் தகவல்கள் வெளியானது. … Read more

காசாவில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஹமாஸ்

காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக … Read more