இந்த 3 வீரர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்த கவுதம் கம்பீர்! இனி அணியில் இடம் பெறுவார்களா?

England vs India: இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளனர். 

That’s Stumps on Day 1 of the 5th #ENGvIND Test! #TeamIndia end the rain-curtailed opening Day on 204/6.

We will be back for Day 2 action tomorrow. 

Scorecard https://t.co/Tc2xpWMCJ6 pic.twitter.com/VKCCZ76MeG

— BCCI (@BCCI) July 31, 2025

இரண்டு அணிகளிலும் மாற்றம் 

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. இந்திய அணியில் பும்ரா, சர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெறவில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ள ஓவல் மைதானத்தில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்துள்ளது. கருண் நாயர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் கிரீஸில் உள்ளனர். 

மூன்று வீரர்களை ஓரம் கட்டிய கம்பீர் 

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் மூன்று வீரர்களை தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓரம் கட்டியுள்ளார். அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் இவர்கள் அணியில் இருந்தாலும் பிளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆஸ்திரேலியா தொடரிலும் இடம்பெற்று இருந்த அபிமன்யு ஈஸ்வரன் ஐந்து போட்டிகளிலும் விளையாடவில்லை. அதே போலவே இங்கிலாந்து தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் தனது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார். 

103 உள்ளூர் போட்டிகளில் விளையாடி உள்ள அபிமன்யு ஈஸ்வரன் 7841 ரன்கள் அடித்துள்ளார். இதில் 27 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும். இவரை போலவே வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஐந்தாவது போட்டியிலும் அவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பேட்டிங்கிலும் கை கொடுப்பதால் குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இணைந்துள்ள கருண் நாயர் இந்த தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பும் பட்சத்தில் அடுத்த டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது சந்தேகமே. மறுபுறம் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள சாய் சுதர்சன் நன்றாக விளையாடினாலும் அரை சதம் மற்றும் சதமாக மாற்றுவதற்கு சிரமப்படுகிறார். அவருக்கும் இது ஒரு முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. மறுபுறம் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இனிவரும் காலங்களிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.