Ajinkya Rahane And Pujara: இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் அஜின்கியா ரஹானே மற்றும் சத்தீஸ்வர் புஜாரா உள்ளனர். இவர்கள் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிகம் விளையாடவிட்டாலும், இவர்கள் டெஸ்ட் அணியின் முக்கிய துணாக இருக்கின்றனர். குறிப்பாக புஜாரா, ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத டெஸ்ட் வீரராக இருந்தார். அவர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் கடந்த சில காலமாகவே இந்த இரண்டு வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் இருவருமே தங்களை இந்திய அணி அழைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழலே நிலவி வருகிறது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்ல் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலரும் ரஹானே, புஜாரா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை என கூறி வருகின்றனர்.
பிசிசிஐ அதிரடி
இந்த நிலையில், ரஹானே மற்றும் புஜாராவுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையிலேயே பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதாவது வர இருக்கும் துலீப் டிராபி தொடருக்கான இரண்டு மண்டல அணியை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் அஜின்கியா ரஹானே மற்றும் சத்தீஸ்வர் புஜாரா ஆகியோரின் பெயர் சேர்க்கப்படவில்லை. துலீப் டிராபியில் இருவருமே இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பளிக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் கிரிக்கெட் கரியரே முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இனி வாய்ப்பில்லை
அவர்கள் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அஜின்கியா ரஹானே இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 5077 ரன்கள் அடித்து 38.46 சராசரியுடன் உள்ளார். இதில் 12 சதம் மற்றும் 26 அரைசதம் அடங்கும். அதேபோல் சத்தீஸ்வர் புஜாரா 103 டெஸ்ட் போட்டிகளில் 7,195 ரன்கள் குவித்து 43.60 சராசரியுடன் உள்ளார். அதில் 19 சதம் மற்றும் 35 அரைசதம் அடங்கும்.
மேலும் படிங்க: பாத்ரூமில் கதறி அழுத விராட் கோலி.. 2019ல் நடந்தது என்ன?
மேலும் படிங்க: இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!