தூத்துக்குடி: விளாத்திக்குளத்தில் மக்கள் சந்திப்பு நடத்திய அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வரவேண்டுமா? விளாத்திக்குளம் பகுதி பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார். “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிவாரியாக பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்கட்ட பிரசார பயணம் முடிவடைந்த நிலையில், இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின்போது, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரையும் சந்தித்து […]
