சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகத் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் ஆய்வு […]
