Virat Kohli: நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று 18 ஆண்டு கனவை நிறைவு செய்துக்கொண்டது. பிரபல ஐபிஎல் அணியில் கோப்பையை வெல்லாத அணியாக ஆர்சிபி அணி இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு வென்று ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக மாறியது. இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விராட் கோலி ஆனந்த கண்ணீர்
அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்திலேயே ஆனந்த கண்ணீர் விட்டு கோப்பை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை ரசிகர்கள் அனைவருமே பார்த்தனர். அந்த அழுகையில் அவரது 17 வருட வலி தெரிந்தது. இந்த நிலையில், விராட் கோலி, மணமுடைந்து அழுத ஒரு சம்பவத்தை இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். அப்போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 240 என்ற இலக்கை எட்டமுடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியின் முடிவில் அனைத்து வீரர்களுமே கண்கலங்கியபடி இருந்தனர்.
பாத்ரூமில் கதறி அழுதார்
virat kohli crying in bathroom: அதிலும் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த தோல்வியை தாங்க முடியாமல், பாத்ரூமிற்கு சென்று கதறி அழுதார். நான் அதை நேரில் பார்த்தேன். அவர் அப்படி கண்கலங்கி நின்றது மிகவும் வருத்தமாக இருந்தது. இவ்வாறு யுஸ்வேந்திர சாஹல் கூறினார். 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை சென்றது.
விராட் கோலி அத்தொடரில் 443 ரன்களை சேர்ந்திருந்தார். ஆனால் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. குறிப்பாக அப்போட்டியில் தோனியின் ரன் அவுட்டை அவ்வளவு எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. அவர் களத்தில் நின்றிருந்தால், இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்திருக்கும். விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இனி அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான்? லேட்டஸ்ட் அப்டேட்!
மேலும் படிங்க: இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!