மீண்டும் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான்? லேட்டஸ்ட் அப்டேட்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தங்களது இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த முடிவு, இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், அணி தேர்வில் ஒரு புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடருக்கான மேற்கு மண்டல அணியில் விளையாட தயாராக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) உறுதிப்படுத்தியுள்ளனர்.

Shardul Thakur to lead West Zone in the Duleep Trophy. No place for Cheteshwar Pujara and Ajinkya Rahane. Jaiswal, Shardul, Shreyas and Sarfaraz all make the West Zone squad. pic.twitter.com/5QwkYg6fD0

— Vishesh Roy (@vroy38) August 1, 2025

சிவம் துபே

இவர்களை தவிர, ஆல்-ரவுண்டர் சிவம் துபே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஆகியோரும் இந்த முக்கிய தொடரில் விளையாட தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மேற்கு மண்டல அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் காலிறுதி வெற்றியாளரை எதிர்கொள்ள உள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்காக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களை அடித்துள்ளார். கடந்த உள்நாட்டு சீசனில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடிய போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

ஸ்ரேயாஸ்

“ஸ்ரேயாஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினார், உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார், ஆனால் தற்போதைக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை” என்று அகர்கர் அப்போது கூறியிருந்தார். இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து கடினமாக உழைக்கும் அனைவரும் டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியும்” என்று கூறியது, ஸ்ரேயாஸ் போன்ற வீரர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மறுபுறம், உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் மழை பொழிந்து வரும் சர்ஃபராஸ் கான், தனது உடல் எடையைக் கணிசமாக குறைத்து, கடுமையாக உழைத்த போதிலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகவில்லை. 

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்த அவர், அடுத்த இரண்டு டெஸ்டுகளில் ரன்கள் அடிக்க தவறியதால், பார்டர்-கவாஸ்கர் டிராபி முழுவதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரிலும் அவர் இடம்  பெறவில்லை. தற்போது துலீப் டிராபி மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்து, தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க அவர் தயாராகி வருகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்று சுமார் இரண்டு மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதால், ஷர்துல் தாக்கூர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மேற்கு மண்டல அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில், துலீப் டிராபிக்கான தெற்கு மண்டல அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு மண்டல அணி

ஷர்துல் தாக்குர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹார்விக் தேசாய், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்மீத் படேல், மனன் ஹிங்ராஜியா, சௌரப் நவாலே (விகீ), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நாக்வாஸ்வாலா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.