மாண்ட்ரியல் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டொராண்டோ,

மாண்ட்ரியல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகா குடெர்மித்தோவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதே போல் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மிரா ஆன்ட்ரீவா (ரஷியா) 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்டில் 32-ம் நிலை வீராங்கனையான மெக்கார்ட்னி கெஸ்லரிடம் (அமெரிக்கா) வீழ்ந்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.