India vs England 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடியது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நேற்று (ஆக. 04) முடிவடைந்தது. இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு போட்டி டிராவில் முடிவடைந்ததால், டிராபில் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. முதன்முறையாக விராட் கோலி, ரோகித் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இத்தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், இங்கிலாந்து அணி பக்கமே தொடர் சென்றுக்கொண்டிருந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து இரண்டாவது போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெறப்போதுவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இங்கிலாந்து அணி அப்போட்டியை 22 ரன்கள் வென்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பின்னர் நான்காவது போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில், இந்திய அணி விளையாடி அதனை வெற்றிகரமாக செய்தது. அதேபோல், 5வது போட்டியை வெற்றி பெற்றாக வேண்டும் என்று அதனையும் செய்து இந்திய அணி தொடரை டிரா செய்தது. இந்த நிலையில், இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல்
இந்த பட்டியலில் அதிக ரன்கள் அடித்த முதல் 5 வீரர்களில் மூன்று வீரர்கள் இந்தியர்கள்தான். அதன்படி பட்டியலின் முதல் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளார். அவர் 754 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். இதையடுத்து ஜோ ரூட் 537 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், கே.எல்.ராகுல் 532 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 516 ரன்கள் எடுத்து 4வது இடத்திலும், ஹாரி புரூக் 481 ரன்கள் அடித்து 5வது இடத்திலும் உள்ளார். இவர்களை தொடர்ந்து ரிஷப் பண்ட், பென் டக்கெட் ஆகியோ அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்களின் பட்டியல்
இந்த பட்டியலின் முதல் 5 இடங்களிலும் 3 வீரர்கள் இந்தியார்களே. முதல் இடத்தில் 23 விக்கெட்களை வீழ்த்தி முகமது சிராஜ் உள்ளார். இதையடுத்து ஜோஸ் டங் 19 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், 17 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3வது இடத்திலும், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 14 விக்கெட்களை வீழ்த்தி 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.
மேலும் படிங்க: விராட் கோலியுடன் காதல்? பாகிஸ்தான் வீரருடன் திருமணம்? தமன்னாவே சொன்ன விஷயம்!
மேலும் படிங்க: இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் போட்டி யாருடன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22