காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது.

அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார்.

இதற்கு பிரதிபலனாக குரு​கி​ராமில் 3.5 ஏக்​கர் நிலத்தை ராபர்ட் வதே​ரா​வுக்கு ஓபிபிஎல் நிறு​வனம் வழங்​கியது. ஆனால் இதை ரூ.7.5 கோடிக்கு வாங்​கிய​தாக ராபர்ட் வதேரா கூறுகிறார். இது பொய் என கூறிய அமலாக்​கத்​துறை, ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பிட்​டா​லிட்டி நிறு​வனம் (எஸ்​எல்​எச்​பிஎல்) வங்கி கணக்​கில் அப்​போது ரூ.7.5 கோடி பணம் இல்லை எனவும், அவர்​கள் தெரி​வித்த காசோலை எண், வங்​கி​யில் பணமாக்​கப்​பட​வில்லை எனவும் தெரி​வித்​துள்​ளது. இந்த நிலத்தை ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பிட்​டா​லிட்டி நிறு​வனம், டிஎல்​எப் என்ற ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​துக்கு ரூ.58 கோடிக்கு விற்​றது.

இவ்​வாறு குற்​றப்​பத்​திரிக்​கை​யில் அமலாக்​கத்​துறை கூறி​யுள்​ளது. இதையடுத்து நிதி​மோசடி தடுப்​புச் சட்ட நீதி​மன்​றம் ராபர்ட் வதே​ரா​வுக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இந்த விவ​காரத்​தில் ஃபரி​தா​பாத்​தில் உள்ள ராபர்ட் வதே​ரா​வின் 39.7 ஏக்​கர் நிலத்தை அமலாக்​கத்​துறை கடந்த மாதம் 16-ம் தேதி பறி​முதல் செய்​தது. இதன் மதிப்பு ரூ.37 கோடி.

பிரி​யங்கா​வுக்கு சிக்​கல்: பிரி​யங்கா காந்தி வயநாடு தொகு​தி​யில் போட்​டி​யிட்​ட​போது, தனது வேட்பு மனு​வில் கணவர் வதேராவின் சொத்து விவரங்களை தெரிவிக்​க​வில்​லை. இதை எதிர்த்து கேரள உயர்​ நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. வேட்பு மனு​வில் சொத்​து​களை மறைத்​தால் அது தண்​டனைக்​குரிய குற்​றம். தகுதி நீக்​கம்​,​ சிறை​ தண்​டனைக்​கும்​ வாய்​ப்​புள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.