ஜாகீர்கானை மணந்த பிரபல நடிகை! திருமணத்தில் முடிந்த காதல்!

இந்திய கிரிக்கெட் உலகிற்கும், வண்ணமயமான பாலிவுட் உலகிற்கும் இடையேயான காதல் கதைகள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் சாதி, மதம் போன்ற தடைகளை தாண்டி, காதலுக்காக கரம் கோத்த பல ஜோடிகள் ரசிகர்களுக்கு உதாரணமாக திகழ்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதைதான், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் மற்றும் ‘சக் தே இந்தியா’ படப் புகழ் நடிகை சாகரிகா காட்கே ஆகியோருடையது. இவர்களது சுவாரஸ்யமான திருமண கதையை பற்றி பார்ப்போம்.

மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!

நட்பில் மலர்ந்த காதல்

2007 ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தில் நடித்து, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் நடிகை சாகரிகா காட்கே. மறுபுறம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஜாகீர் கான். இருவரும் ஒரு பொதுவான நண்பரின் விருந்து நிகழ்ச்சியில் சந்தித்து கொண்டனர். அந்த சந்திப்பு, நாளடைவில் நட்பாக மாறி, காதலாக மலர்ந்தது. இருவரும் தங்கள் உறவை பொது வெளியில் இருந்து தள்ளியே வைத்திருந்தனர். ஆனால், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோரின் திருமண விழாவிற்கு இருவரும் ஜோடியாக வந்தபோது, அவர்களது காதல் வெளிச்சத்திற்கு வந்தது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 24, 2017 அன்று, தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மதங்களைக் கடந்த திருமணம்

ஜாகீர் கான் இஸ்லாமிய மதத்தையும், சாகரிகா காட்கே இந்து மதத்தையும் சேர்ந்தவர்கள். இதனால், அவர்களது திருமணம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. ஆனால், காதலுக்கு மதம் ஒரு பொருட்டல்ல என்பதை இந்த ஜோடி நிரூபித்தது. நவம்பர் 23, 2017 அன்று, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு, தங்கள் வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினர். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய நடிகை சாகரிகா, “எனது குடும்பத்தினர் மிகவும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். சரியான ஒரு மனிதரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பதுதான் முக்கியமே தவிர, மதம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை” என்று குறிப்பிட்டார். மேலும், ஜாகீர் கான் தனது தந்தையை சந்தித்தபோது, இருவருக்கும் இடையே ஒரு அழகான உறவு உருவானதாகவும், தனது தாயார் தன்னைவிட ஜாகீர் கானைத்தான் அதிகம் நேசிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஜாகீர் கானின் குடும்பத்தினர் கூட, சாகரிகா நடித்த ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தின் சிடியை வாங்கி பார்த்த பிறகே, இந்த திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முன்னுதாரணமான ஜோடிகள்

கிரிக்கெட் மற்றும் சினிமா உலகில், மதங்களை கடந்து திருமணம் செய்து கொண்ட முதல் ஜோடி இவர்களல்ல. இவர்களுக்கு முன்னோடியாக, பழம்பெரும் நடிகை ஷர்மிளா தாகூர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியை மணந்தார். இதற்காக, ஷர்மிளா தாகூர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை ஆயிஷா சுல்தானா என மாற்றிக் கொண்டார். இதேபோல், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார். இவர்களும் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜோடிகளில் சிலராவர். இந்த வரிசையில், ஜாகீர் கான் மற்றும் சாகரிகா காட்கே ஜோடியும் தங்களது திருமண உறவின் மூலம், காதலுக்கு மதம் ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.