தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி; ராகுல் காந்தி உட்பட இண்டியா கூட்டணி எம்.பிக்கள் கைது!

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகர் துவாரிலிருந்து நிர்வாச்சன் சதனில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குப் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து செல்லும்போது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளதால், இண்டியா கூட்டணி மூத்த தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று நடந்த பேரணியின் போது திரிணமூல் எம்.பி மிதாலி பாக் மயக்கமடைந்தார்.

பேரணியின் போது பேசிய காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கையை மிகவும் தெளிவாக முன்வைக்கிறோம். நாங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அமைதியான பேரணியை நடத்தி வருகிறோம். பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை வழங்க விரும்புகிறோம். இப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு செல்வதற்கு கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால், ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.