Cristiano Ronaldo Engaged With Georgina : போர்துகீசிய கால்பந்து வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ, பல ஆண்டுகளாக காதலித்து வந்தவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர் குறித்தும், அவர் திருமணம் செய்துகொள்ள போக இருக்கும் அவரது காதலி குறித்தும் இங்கு பார்ப்போம்.
ப்ரப்போஸ் செய்தார்…
5 குழந்தைகள், 9 வருட டேட்டிங்கிற்கு பிறகு, ஒரு வழியாக தனது காதலி ஜார்ஜினாவிற்கு கிரிஸ்டியானாே ரொனால்டோ ப்ரப்போஸ் செய்திருக்கிறார். இது குறித்து அவரது காதலி ஜார்ஜினா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அதில், “நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன். இப்போதும், அனைத்து ஜென்மங்களிலும்” என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இவரது கமெண்ட் செக்ஷன் முழுவதும் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரொனல்டோவோ அவரது திருமண நிச்சயதார்த்தம் குறித்து ஒரு பதிவையும் வெளியிடவில்லை. திருமணம் எப்போது, எங்கு நடக்கிறது என்பது குறித்து அவர் விரைவில் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
கிரிஸ்டியானே ரொனால்டோவின் குடும்பம்:
போர்த்துகல் நாட்டின் கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிகவும் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட விளையாட்டு வீரராக கருதபடுகிறார். இவருக்கு தற்போது 40 வயதாகிறது. தன் நாட்டிற்காக கால்பந்து விளையாட்டில் பல கோப்பைகளை வாங்கிக்கொடுத்திருக்கும் இவர், கால்பந்து விளையாட்டில் ஐகானாக திகழ்கிறார்.
இவரும், ஸ்பேனிஷ் நாட்டின் மாடலான ஜார்ஜினா ரோட்ரிகிஸ் (Georgina Rodríguez) என்பவரும், கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து காதல் உறவில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 9 வருட காலங்களாக இவர்கள் டேட்டிங் உறவில் இருக்கின்றனர்.
ரோனால்டோவிற்கு கிரிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் என்கிற மகன் இருக்கிறார், இவரது தாய் யார் என்று வெளி உலகிற்கு தெரிவிக்கப்படவில்லை. 2017ல் வாடகைத்தாய் மூலம் ஏவா மரியா என்கிற குழந்தை பிறந்தது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் அலானா மார்டினா என்கிற இன்னொரு குழந்தையும் வாடகைத்தாய் மூலம் பிறந்தது. ரொனால்டோவிற்கும், ஜார்ஜினாவிற்கும் 2022ல் ஒரு குழந்தை பிறந்தது. ரொனால்டோ இதன்மூலம் 5 குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார்.
பல ஆண்டுகள் டேட்டிங்..
ராெனால்டோவும், ஜார்ஜினாவும் பல ஆண்டுகள் காதல் உறவில் இருந்தாலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தாலும், 5 குழந்தைகளையும் தாய்-தந்தையாக வளர்த்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தனர். மேற்கத்திய கலாச்சாரத்தில் இவை சகஜம்தான் என்றாலும், இவர்கள் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளைத்தாண்டி டேட்டிங் உறவில் மட்டும் இருந்தது குறித்து பலரும் பேசி வந்தனர்.
சமீபத்தில் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரொனால்டோ, “எங்களுக்குள் ஏதோ க்ளிக் ஆகவில்லை..திருமணம் கண்டிப்பாக நடக்கும். ஆனால் எப்போது என்று தெரியவில்லை” என்று கூறினார். அவரது காதலி ஜார்ஜினாவோ, “இன்னும் எனது கையில் நிச்சயதார்த்த மாேதிரம் இல்லாததை வைத்து குடும்பத்தினர் நகைச்சுவை செய்கின்றனர்” என்று கூறினார். இதையடுத்து பலரும் ரோனால்டோ இன்னும் ப்ரப்போஸ் செய்யாதது குறித்து பலரும் பேசி வந்தனர்.