1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்​தில் திறக்​கப்​பட்ட செனாப் பாலம் வழி​யாக 1,400 டன் சிமென்ட் மூட்​டைகளு​டன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்​ப​தால் அங்கு வலு​வான தரைவழி போக்​கு​வரத்து வசதி​கள் இல்​லாமல் இருந்​தது. அதனால் அங்கு பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் அமைப்​ப​தில் பல சிக்​கல்​கள் ஏற்​பட்​டன. தற்​போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்​டமைப்​பு​கள் நவீனப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்​டத்​தில் செனாப் ஆற்​றின் குறுக்கே 4315 அடி நீளத்​தில், ஆற்​றில் இருந்து 1,178 அடி உயரத்​தில் இரும்பு மற்​றும் கான்​கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு கால​மாக அமைக்​கப்​பட்டு வந்​தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்​கப்​பட்​டது.

அதே​போல் செனாப் ஆற்​றில் கிளை நதி​யான ஆஞ்சி ஆற்​றின் குறுக்கே 2380 அடி நீளம், 1086 அடி உயரத்தில் கேபிள் ரயில் பாலம் அமைக்​கப்​பட்​டது. இந்த ரயில் பாதைகள் வழி​யாக ரயில்​கள் இயக்​கப்​பட்டு பல கட்ட சோதனை​கள் நிறைவடைந்​தன. இந்​நிலை​யில் முதல் சரக்கு ரயில் பஞ்​சாப்​பில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த வெள்ளி கிழமை இயக்​கப்​பட்​டது. சரக்கு ரயி​லின் 21 பெட்​டிகளில் 1,400 டன் சிமென்ட் மூட்​டைகள் ஏற்​றப்​பட்​டன.

மின்​சார என்​ஜின் பொருத்​தப்​பட்ட இந்த சரக்கு ரயில் 18 மணி நேரத்​துக்​குள் 600 கி.மீ பயணம் செய்து கடந்த சனிக்​கிழமை காலை ஜம்மு காஷ்மீர் சென்​றடைந்​தது. இந்த சரக்கு ரயில் செனாப் மற்​றும் ஆஞ்சி ரயில் பாலங்​களை கடந்து சென்​றது, அந்த பாலத்​தின் வலிமை​யை​யும், இந்திய ரயில்​வே​யின் நவீன கட்​டமைப்​பையும் பறை​சாற்​றுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு அதி​களவி​லான சிமென்ட் மூட்​டைகள் கொண்டு செல்​லப்​படு​வது, அங்கு நடை​பெறும் கட்டமைப்புதிட்டங்களுக்கு மிக முக்​கிய​மானது என ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் சரக்கு மைய​மும் தற்​போது செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தால், காஷ்மீருக்கு குறைந்த போக்​கு​வரத்து செல​வில் சரக்​கு​களை கொண்டு செல்​வது மேம்​படும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர்​ மாநிலத்​தின்​ வளர்ச்​சி இனி வேகம்​ எடுக்​கும்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.