சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் ஆளுநர் மாளிகை, மாநிலஅரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய […]
