ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு – காரணம் அடுக்கிய அரசு!

சென்னை: தமிழக ஆளுநரின் போக்கை எதிர்த்து சுதந்திர தின தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி நானும் ஆகஸ்ட் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ள அழகப்பா மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 15.8.2025 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் புறக்கணிக்கிறார். அடுத்து வரும் பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர் கல்வித் துறை அமைச்சர் பங்கேற்பு பங்கேற்க மாட்டார்.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதல்வர் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அது மட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி குட்டி (எ) வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றார். அந்தத் தடையாணையினை நீக்கிட உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், ஆளுநர் அவர்கள் மேற்படி பா.ஜக பிரமுகர் தெரிவித்த கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் 15.8.2025 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார். மேலும், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தானும் 18.8.2025 மற்றும் 19.8.2025 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.