சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியும், பெண்களை தரதரவென இழுத்துச்சென்றும் நள்ளிரவு கைது செய்துள்ள நடவடிக்கை பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. இந்த கைது சம்பவத்தின்போது பல பெண்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், போராடியவர்களை பேருந்துக்குள் அடித்து இழுத்து சென்று போட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான […]
