சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,937.76 கோடி முதலீட்டு திட்டங்களுக்குத் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் வரும் செப்டம்பர் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, தலைமைச்செயலகத்தில் நேற்று (ஆகஸ்டு 14) தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.1,937.76 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள், மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், […]
