இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.
ஆனால், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு வருத்தமான சம்பவம் நடந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் வீசிய ஓர் பந்தை ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றபோது தவறவிட்டு கால் பகுதியில் அடிவாங்கினார். இந்த தாக்குதலால் அவருக்கு பெரும் வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவக்குழு அவருக்கு முதல் உதவி அளித்தனர். இருப்பினும் மைதானத்தில் இருந்து வெளியேறி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் பண்டப் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், உடைந்த காலுடன் அந்த இன்னிங்ஸின் பேட்டிங்கை முழுமையாக விளையாடினார். அப்போட்டியில் அரைசதமும் அடித்தார். இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு, ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்து விலகினார். தற்போது அறுவை சிகிச்சையின் அடிப்படையில் மீட்கப்பட்டு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
இந்த நிலையில், காயத்தால், இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பின்னர் முதல்முறையாக காயம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், அவர் தனது பாதத்தில் பேண்டேஜுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில், “I hate this so much” என தனது வலியை பகிர்ந்துள்ளார்.
இதனால் எதிர்வரும் 2025 ஆசிய கோப்பைத் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடலாம். ஒருவேளை ரிஷப் பண்ட் இந்த இரண்டு தொடரிலும் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணி மிகப்பெரிய பின்னடைவாக இருக்கக்கூடும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் 7 இன்னிங்ஸ் விளையாடி 479 ரன்கள் குவித்தார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji