இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக மொத்தம் 90 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில், 169 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில், விராட் கோலியுடன் தான் பயணித்த அனுபவம் குறித்து ஸ்ரீசாந்த் பேசி இருக்கிறார். இது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கோலி ஆர்வம் மிகுந்தவர்
கோலியின் கள நடத்தை குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஆக்ரோஷத்திற்கும் ஆர்வத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்தார். இது தொடர்பாக பேசிய அவர், எதையாவது மாற்ற வேண்டுமா என்று கேட்டல், நான் இல்லை என்றே சொல்வேன். மற்றவர்கள் ஆக்ரோஷமாக அதனை அழைக்கிறார். நான் அதை ஆர்வம் என அழைக்கிறேன்.
விராட் கோலி ஆக்ரோஷமிக்கவரா? இல்லை, அவர் ஆர்வத்துடன் இருக்க கூடியவர். கோலியிடம் ஆக்ரோஷம் அதிகம் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் அந்த ஆக்ரோஷ்த்தை குறைத்தால், அவர் அவராக இருக்க மாட்டார். அவரிடம் ஆட்டத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவர் அப்படி தெரியலாம் என கூறினார்.
ஹர்பஜன் – ஸ்ரீசாந்த் மோதல்
இதேபோல், 2008ல் தனக்கும் ஹர்பஜனுக்கும் இடையே நடந்த சம்பவத்தை பற்றியும் ஸ்ரீசாந்த் பேசினார். ஐபிஎல் 2008ல் ஒரு போட்டியின்போது ஹர்பஜன் சிங் கோபத்தில் ஸ்ரீசாந்தை கண்ணத்தில் அறைந்துவிட்டார். இந்த செயலுக்காக ஹர்பஜன் 5 போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார். பின்னர், ஒரு நாள், ஸ்ரீசாந்த்தின் மகளிடம் ஹர்பஜன் சிங் பேச முயன்ற போது, அந்த சிறுமி, நான் உங்களுடன் பேச மாட்டேன். நீங்கள் என் தந்தையை அடித்தவர் என கூறினார்.
இது குறித்டு பேசிய ஸ்ரீசாந்த், இதுதான் பாஜி பா, இவர் என்னுடன் விளையாடி இருக்கிறார் என அறிமுகம் செய்தபோது, எனது மகள் நேரடியாகவே பேச முடியாது என கூறிவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இது குறித்து பலவிதமாக பேசி இருப்பார்கள் போலிருக்கிறது. நாங்கள் எவ்வளவோ புரிய வைக்க முயன்றோம். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். பின்னர் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டின்போது, நாங்கள் அவளுக்கு அவர் என் அண்ணன் மாதிரி என புரிய வைத்தோம். அவர் வேண்டுமென்றே அதை செய்யவில்லை அது ஆட்டத்தின்போது எதிர்பார்க்காமல் நடந்தது. இது எங்கள் இருவருக்குமே ஒரு அனுபவ பாடம்தான் எனக் கூறினார்.
About the Author
R Balaji