லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் கொஹட் மாவட்டம் ஹரா ஹரி முகமது சை கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணியளவில் காரில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ரிஹி ஷினொ ஹெல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அந்த காரை பைக்கில் வந்த நபர் இடைமறித்துள்ளார். பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை மீட்ட அப்பகுதி கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது முன்விரோதம் காரணத்தால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.