India Pakistan Match: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக கத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டபர் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யுஏஇ உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் அம்மாதம் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்த் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால் இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பகல்காமில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் துண்டித்தது. சமீபத்தில் நடந்த லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் போன்றோர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட மறுத்து, களத்தில் இருந்து வெளியேறினர்.
இந்த சூழலில் ஆசிய கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதுமா? என்ற கேள்வி உள்ளது. ஓரளவு பெரிய தொடர் என்பதால், விளையாட மறுக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கேதர் ஜாதவ், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி எங்கு நடந்தாலும் இந்திய அணிதான் வெற்றி பெறும். இதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிக்கொள்ளாது. இப்போட்டி நடைபெறாது. ஆப்ரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றியை நமக்கு தந்தது. நமது நாடு எதிரிகளை அவர்கள் நாட்டிற்கே சென்று அழிக்கும் வல்லமையை பெற்றது எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங், நாம் முதலில் எது முக்கியம் எது முக்கியம் இல்லாதது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். ராணுவ வீரர் நமது பாதுகாப்புக்காக நாட்டின் எல்லையில் நிற்கின்றனர். அவர்கள் குடும்பத்தை பிரிந்து சில சமயம் வாழ்க்கையையே தியாகம் செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது மிகவும் ஒரு அர்ப்பமான விஷயம். எனவே பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடக்கூடாது என அவர் கூறினார்.
About the Author
R Balaji