சென்னை: சென்னையில் இன்று அதிகாலை காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையில், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், […]
