நைரோபி,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.
Related Tags :