திருவனந்தபுரம்,
கேரளாவில் திருச்சூர் மாவட்டம் கண்ணன் குழி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக குட்டியுடன் உலாவரும் யானை கூட்டம், விவசாய பயிர்களை அழித்தும், மக்களை அச்சுறுத்தியும் வந்தது.
இந்நிலையில் அங்கிருந்த சொகுசு விடுதியின் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று உலா வந்துள்ளது. அங்கிருந்த மக்கள் உலா வரும் யானை கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து விடுதிக்குள் இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்து அங்கு சுத்திக்கொண்டிருந்த யானைகளை விரட்டினர். இதனிடையே அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் இதனை வீடியோ எடுத்துள்ளார். சொகுசு விடுதிக்குள் திடீரென புகுந்த யானை கூட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :