மதராஸி இசைவெளியீட்டு விழா: "என்னோட SK-வுக்காக நான் நிப்பேன்!" – நெகிழ்ந்த அனிருத் கலங்கிய SK

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.

முருகதாஸ் - சிவகார்த்திகேயன்
முருகதாஸ் – சிவகார்த்திகேயன்

இந்நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “ருக்மினி படத்துல செமையா நடிச்சிருக்காங்க.

நான் ரெண்டு படம் பண்ணியிருந்த சமயத்துல கத்திங்கிற பெரிய படத்தை எனக்கு கொடுத்தாரு (முருகதாஸ்).

நான் இங்க நிக்குறேன்னா அதுக்கு காரணம் அவர்தான். எஸ். கே என்னுடைய செல்லம். என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படம் எதிர்நீச்சல்தான்.

இது நாங்க சேரும் 9-வது படம். அவர் மனசு ப்யூராக இருக்கிறதுதான் அவர் இன்னைக்கு இங்க இருக்குறதுக்கு காரணம்.

50, 100னு இப்போ 300 கோடி வசூல் அடிச்சுட்டாரு. மதராசி படத்துல வேற ஒரு அவதார்ல எஸ். கே வை பார்ப்பீங்க!

அனிருத்
அனிருத்

ட்ரைலர்ல இது என் ஊருடா நான் நிப்பேன்னு சொல்வாரு. இது என் எஸ்.கே நான் வந்து நிப்பேன்.

நானும் எஸ்.கே-வும் சேர்த்து ஒரே சமயத்துல கரியரை தொடங்கினதுனால அது பர்சனலான உறவு.

என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன். அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி நான் சந்தோஷப்படுவேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.