சென்னை: திரு. வி.கலியாணசுந்தரனார் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆம் பிறந்தநாள் 26.8.2025 செவ்வாய்க்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், […]
