சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், […]
