ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசி​யக் கொடியேந்​தி​யபடி பங்​கேற்​றனர்.

இதனிடையே, இந்​தப் போராட்​டத்​துக்கு இடது​சா​ரி​கள் தலை​மையி​லான அந்​நாட்டு அரசு கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது நவ-​நாஜிக்​களின் வெறுப்பை பரப்​பும் செயல் என்று அரசு குற்​றம்​சாட்டி உள்​ளது. இந்த போராட்​டத்​துக்கு எதி​ராக அகதி​கள் நடவடிக்கை கூட்​டமைப்பு பேரணி நடத்​தி​யது.

இதுகுறித்து அந்த அமைப்​பின் செய்​தித் தொடர்​பாளர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி, தீவிர வலது​சாரி அமைப்​பினரின் வெறுப்​பு மற்​றும்​ கோபத்​தை வெளிப்​படுத்​து​வ​தாக உள்​ளது’’ என கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.