சஞ்சு சாம்சன் ஓபனர்… கில் நம்பர் 3 – இந்திய அணிக்கு இதுதான் நல்லது – ஏன்?

Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன், சுப்மான் கில் இருவரும் இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கும் சூழலில், இவர் பிளேயிங் லெவனில் எந்த ஆர்டரில் விளையாட வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

ஆசிய கோப்பை தொடர் வரும் செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற இருக்கிறது. செப். 28ஆம் தேதி தொடர் பரபரப்பான சூழலில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி அதன் முதல் போட்டியில் செப். 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதுகிறது. அடுத்து செப். 14ஆம் தேதி பாகிஸ்தான், செப். 19ஆம் தேதி ஓமன் நாடுகளுடன்  மோதுகிறது.

Asia Cup 2025: சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாடை பிசிசிஐயின் தேர்வுக்குழு அறிவித்து. காத்திருப்பு பட்டியலில் 5 வீரர்களையும் அறிவித்திருக்கிறது. முக்கியமாக சுப்மான் கில் டி20ஐ அணிக்குள் மீண்டும் வந்துள்ளார், அவருக்கு துணை கேப்டன்ஸி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துருவ் ஜூரேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு இல்லை. ஜித்தேஷ் சர்மா பேக்அப் விக்கெட் கீப்பராக மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளார். பும்ராவும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறார்.

Asia Cup 2025: ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பில்லை 

ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி எடுக்கவில்லை. இது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் மூவருமே டி20ஐ அணியில் இடம்பிடிக்கும் ரேஸில் இருந்தார்கள். ஆனால் கில் மட்டுமே அதில் தேர்வானார். ஏற்கெனவே சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா என இரண்டு செட்டான ஓபனர்கள் இருக்கும்போது கில்லை தேர்வு செய்ததே பெரியளவுக்கு விமர்சிக்கப்பட்டது. இதனால் ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை எனலாம். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப்பாக சிவம் தூபே வேண்டுமென்பதாலும், ரின்கு சிங் மீது இன்னும் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை இருப்பதால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பில்லை.

Asia Cup 2025: சஞ்சு – கில் பஞ்சாயத்து

தற்போது கில் – சாம்சன் பஞ்சாயத்தை எடுத்துக்கொண்டால் யாரை ஓபனிங் இறக்குவது என்பது பெரிய பிரச்னை. ஆனால் துணை கேப்டன் என்ற முறையில் சுப்மான் கில் அனைத்து போட்டியிலும் விளையாடுவார். அப்படியிருக்க கில் தான் ஓபனிங்கில் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும் பேசப்பட்டது. விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா களமிறங்குவார் என கூறப்பட்டது.

Asia Cup 2025: சஞ்சு சாம்சன் ஓபனர்

ஆனால், தற்போது நடைபெற்ற வரும் கேரளா கிரிக்கெட் லீக்கில் ஓபனிங்கில் இறங்கி மூன்று அரைசதம், ஒரு சதம் என 88.75 என்ற சராசரியில் ரன்களை குவித்து வருகிறார். இந்திய அணியில் விளையாடியபோது கூட ஓபனிங்கில் மூன்று சதம் அடித்திருக்கிறார், அதுவும் தென்னாப்பிரிக்காவில் கூட மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியிருக்க, கில் வந்ததும் அவருக்கு ஓபனிங்கை கொடுப்பது சரியல்ல. எனவே, கில்லுக்கு நம்பர் 3 ஸ்பாட்டை கொடுக்கலாம்.

Asia Cup 2025: ஏன் கில்லுக்கு நம்பர் 3 ஸ்பாட்?

ஒரு காலகட்டத்தில் விராட் கோலி நம்பர் 3 இடத்தில் சிறப்பாக விளையாடி வந்தார். டி20ஐ போட்டிகளில் விராட் கோலி நம்பர் 3 இடத்தில் 83 போட்டிகளை விளையாடி 3076 ரன்களை 53.96 சராசரியிலும், 135.26 ஸ்ட்ரைக் ரேட்டிலும் அடித்துள்ளார். சேஸிங்கில் நம்பர் 3 ஸ்பாட் மிக முக்கியம். எனவே, துணை கேப்டனும், வருங்கால கேப்டனுமான கில் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் வேகமாக ரன்களை அடிக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் அடுத்தடுத்த இடங்களில் இறங்கி திறனை வெளிப்படுத்த வேண்டும். அதுவே 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய வெற்றி பெறுவதற்கான பார்முலா ஆகும்.

About the Author


Sudharsan G

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.