பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகிறதா தேமுதிக? – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் என தகவல்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தேமு​திக சேர உள்​ள​தாக​வும், அதற்​கான தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைகள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில் தேமு​திக இடம் பெற்​றிருந்​தது. அப்​போது தேமு​தி​க​வுக்கு 5 இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இதுத​விர ஒரு மாநிலங்​களவை இடமும் வழங்​கப்​படு​வ​தாக தேமு​தி​க​வுக்கு உறுதி அளிக்​கப்​பட்​டது. ஆனால் ஒப்​பந்​தத்​தின்​படி, சமீபத்​தில் நடை​பெற்ற மாநிலங்​கள​வைத் தேர்​தலில் தேமு​தி​கவுக்கு அதி​முக இடம் ஒதுக்​க​வில்​லை.

அதே​நேரம் அடுத்தாண்டு நடை​பெறவுள்ள தேர்​தலில் இடம் வழங்​கு​வ​தாக அதி​முக அறி​வித்​தது. இதனால் தேமு​திக தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். இதையடுத்து கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாட்டை ஜனவரி​யில் நடை​பெறவுள்ள மாநாட்​டில் அறி​விப்​போம் என்று தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் அறி​வித்​தார். இதன்​மூலம் அதி​முக கூட்​ட​ணி​யில் நீடிக்​க​வில்லை என்​பதை தேமு​திக சூசக​மாக தெரி​வித்​தது. அதன்​பின் திமுக​வுடன் கூட்​டணி அமைக்க தேமு​திக ஆர்​வம் காட்​டத் தொடங்​கியது. தமிழக அரசின் திட்​டங்​களை வரவேற்று தேமு​திக தரப்​பில் தொடர்ந்து அறிக்​கைகள் வெளி​யாகின.

இதற்​கிடையே, உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்​டிருந்த திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லினை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பிரேமலதா கடந்த ஜூலை 31-ம் தேதி சந்​தித்து நலம் விசா​ரித்​தார். துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். அப்​போது கூட்​டணி விருப்​பத்தை பிரேமலதா தெரி​வித்​தாக​வும், அதற்கு முதல்​வர் ஸ்டா​லின் பச்​சைக் கொடி காட்​டிய​தாக​வும் பேசப்​பட்​டது.

இந்​நிலை​யில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக – தேமு​திக கூட்​ட​ணிக்​கான பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்​றுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. மூத்த அமைச்​சர் எ.வ.வேலு மூலம் இதற்​கான பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. சமீபத்​தில் திருச்​சி​யில் நடந்த தேமு​திக மாவட்​டச் செய​லா​ளர் டி.​வி.கணேஷ் இல்ல திருமண விழா​வில் கலந்​து​கொண்ட அமைச்​சர் கே.என்​.நேரு, ஒரே மேடை​யில் பிரேமலதா மற்​றும் சுதீஷுடன் சேர்ந்து மணமக்​களை வாழ்த்​தி​யதும் கவனிக்​கத்​தக்​கது.

கூட்​டணி குறித்து தேமு​திக நிர்​வாகி​கள் சிலர் கூறிய​தாவது: விஜய​காந்த் மறைவுக்​குப் பிறகு கட்​சியை வலுப்​படுத்​தும் முயற்​சிகளில் பிரேமலதா தீவிர​மாக செயல்​படு​கிறார். அதற்​கேற்ப மாநிலம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். தேமு​தி​க​வுக்கு 2011 சட்​டப்​பேர​வை தேர்​தலுக்​குப் பின்பு வெற்றி வாய்ப்​பு​கள் அமைய​வில்​லை. எனவே, வரும் தேர்​தல் எங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது.

அதே​நேரம் சென்ற மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் முறை​யான மரி​யாதை வழங்​கப்​பட​வில்​லை. வெற்றி வாய்ப்​பில்​லாத தொகு​தி​கள்​தான் எங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டன. தேர்​தல் பணி​களி​லும் முழு​மை​யான ஒத்​துழைப்பு அளிக்​க​வில்​லை. மேலும், பேசி​யபடி மாநிலங்​களவை இடமும் தரப்​பட​வில்​லை. எனவே, திமுக கூட்​ட​ணி​யில் சேர்ந்து போட்​டி​யிட தலைமை திட்ட​மிட்​டுள்​ளது. எங்​கள் தரப்​பில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இரட்டை இலக்​கத்​தில் இடங்​கள் மற்​றும் ஒரு மாநிலங்​களவை இடமும் ஒதுக்க கோரிக்கை வைத்​திருந்​தோம்.

அதே​நேரம், கூட்​ட​ணி​யில் நிறைய கட்​சிகள் உள்​ள​தால், தற்​போது வெற்றி வாய்ப்​புள்ள 7 தொகு​தி​கள் வழங்​கப்​படு​வ​தாக திமுக தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. அடுத்​தக்​கட்ட பேச்​சு​வார்த்​தைகளில் சுமுக முடிவு எட்​டப்​படும். மேலும், விஜய​காந்த் எம்​எல்​ஏ​வாக இருந்த தொகு​தி​யில் பிரேமல​தாவை போட்​டி​யிட வைக்​க​வும் ஆலோ​சனை செய்து வரு​கிறோம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதற்​கிடையே, தேமு​தி​கவை சமா​தானம் செய்ய அதி​முக, பாஜக தரப்​பில்​ தொடர்​ முயற்​சிகள்​ மேற்​கொள்​ளப்​பட்​டு வரு​வ​தாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.