மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்​தது.

மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 செ.மீ. மழை பெய்​தது. இம்​மழை, செங்​குன்​றம், தாமரைப்​பாக்​கம், ஊத்​துக்​கோட்டை ஆகிய இடங்​களில் கனமழை​யாக​வும், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி, சோழவரம், பூந்​தமல்​லி, ஆவடி, திரு​வள்​ளூர், திரு​வாலங்​காடு, பள்​ளிப்​பட்டு ஆகிய இடங்​களில் மித​மான மழை​யாக​வும், திருத்​தணி, ஆர்​.கே.பேட்​டை, பூண்​டி, ஜமீன் கொரட்​டூர் ஆகிய இடங்​களில் லேசான மழை​யாக​வும் பெய்​தது.

இம்​மழை​யால் திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்ட பகு​தி​களில் உள்ள சென்​னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்​யும் புழல், பூண்​டி, சோழ​வரம் மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஆகிய ஏரி​களுக்கு நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து வரும் மழை நீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

நேற்று காலை நில​வரப்​படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 595கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 360 கன அடி, செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு விநாடிக்கு 225 கன அடி, சோழ​வரம் ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி என, மழைநீர் வரத்து உள்​ளது.

வேகமாக நிரம்பும் ஏரிகள்: அது​மட்​டுமின்​றி, பூண்டி ஏரி​யில் இருந்து இணைப்பு கால்​வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 135 கன அடி, செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, ஆந்​திர மாநிலம்- கண்​டலேறு அணை​யில் இருந்து கிருஷ்ணா கால்​வாய் மூலம் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 420 கனஅடி என நீர் வரத்து உள்​ளது.

எனவே, 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட புழல் ஏரி​யின் நீர் இருப்பு 3,058 மில்​லியன் கன அடி​யாக​வும், 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட பூண்டி ஏரி​யின் நீர் இருப்பு 2,455 மில்​லியன் கன அடி​யாக​வும் உள்​ளது. அதே​போல், 3,645 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர் இருப்பு 1,075 மில்​லியன் கன அடி​யாக​வும், 1,081 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட சோழ​வரம் ஏரி​யின் நீர் இருப்பு 172 மில்​லியன் கன அடி​யாக​வும் உள்​ளது என, நீர்​வள ஆதா​ரத்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.