முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் பயன் தராது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

திருப்புவனம்: சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 6 மாதங்​களே உள்ள நிலை​யில், முதல்​வரின் வெளி​நாட்​டுப் பயணம் பயன் தராது என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கூறி​னார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்தை சந்​தித்து ஜி.கே.​வாசன் ஆறு​தல் கூறி​னார். மாநில தொண்​டரணித் தலை​வர் அயோத்​தி, முன்​னாள் எம்​எல்ஏ உடையப்​பன், மாவட்​டத் தலை​வர்​கள் பாலசுப்​பிரமணி​யன், ராஜலிங்​கம், கவுன்​சிலர்​கள் பாரத்​ராஜா, வெங்​கடேஸ்​வரி உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். முன்​ன​தாக, செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது:

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாமில் மக்​கள் கொடுத்த மனுக்​கள் வைகை ஆற்​றில் மிதக்​கின்​றன. இதன் மூலம் அந்த திட்​டத்​தின் உண்மை முகம் வெளியே வந்​துள்​ளது. இது வாக்கு வங்​கிக்​கான திட்​டம் என்​பதை காட்​டு​கிறது. இதற்கு காரணகர்த்தா என்று கூறி, சில அதி​காரி​களை அரசு பலிகடா ஆக்​கி​யுள்​ளது.

அஜித்​கு​மார் மரணத்​துக்​குப் பிறகும் இது​போன்ற சம்​பவங்​கள் தொடர்​கின்​றன. காவல் துறை தக்க நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். மத்​திய அரசு தமிழகத்​தில் செயல்​படுத்தி வரும் திட்​டங்​கள், பழனி​சாமி​யின் வெற்​றிகர​மான சுற்​றுப் பயணம் போன்​றவற்​றால் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வெற்​றி​வாய்ப்பு அதி​கரித்​துள்​ளது.

முதல்​வர் ஸ்டா​லினின் வெளி​நாட்​டுப் பயணங்​களால் தமிழகத்​துக்கு முழு​மை​யான பயன்​கள் கிடைக்​க​வில்​லை. இது தொடர்​பான வெள்ளை அறிக்​கை​யும் வெளி​யிடப்​பட​வில்​லை. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு 6 மாதங்​களே உள்ள நிலை​யில், முதல்​வரின் தற்​போதைய வெளி​நாட்​டுப் பயணம் பயன் தராது. திமுக அரசு கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாமல் மக்​களை ஏமாற்​றி​விட்​டது. மாணவர்​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, தேசிய கல்விக் கொள்​கையை தமிழக அரசு பின்​பற்ற வேண்​டும்.

ஆடு, மாடு, மரங்​களுக்கு மாநாடு நடத்​திய சீமானை பாராட்​டு​கிறேன். அவரது செயல்​பாட்டை கொச்​சைப்​படுத்​தக் கூடாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.