இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடர் 2-2 என சமனில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்காக தயராகி வருகிறது. அத்தொடரும் இம்மாதம் 09ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Add Zee News as a Preferred Source
ஆசிய கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் அக்டோபர் 02ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 02ஆம் தேதி முதல் 06ஆம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 08ஆம் தேதி முடிவடைகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோபர் 19 முதல் 25 வரை நடக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர், பேட் கம்மின்ஸுக்கு முதுகில் வலி இருந்துள்ளது. இதையடுத்து ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது கீழ் முதுகுப் பகுதியில் லம்பார் எலும்பு அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எலும்பு முறிவுக்கு முந்தைய நிலை என்பதால், அவருக்கு உடனடியாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் இந்தியா, நியூசிலாந்து என எந்த ஒரு தொடரிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து நேரடியாக நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆஷஸ் தொடரில் விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது.
About the Author
R Balaji