முதல் 13 பந்தில் 12 ரன்.. அடுத்த 8 பந்துகளில் 7 சிக்ஸ்.. தெறிக்க விட்ட பொல்லார்ட்

டிரினிடாட்,

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் – செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்டு 65 ரன்களும், பூரன் 52 ரன்களும் அடித்தனர். செயிண்ட் கிட்ஸ் தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதில் பொல்லார்டு தான் எதிர்கொண்ட முதல் 13 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அடுத்த 8 பந்துகளில் 7 சிக்சர்கள் தெறிக்க விட்ட அவர் வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். குறிப்பாக வக்கார் சலாம்கீல் வீசிய 16-வது ஓவரின் கடைசி 4 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மொத்தம் 29 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.

பின்னர் 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய செயிண்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. பொல்லார்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.