Suryakumar Yadav: ஹர்திக்கை தொடர்ந்து ஹேர் கலரை மாற்றிய சூர்யகுமார் யாதவ்?

ஆசிய கோப்பை 2025 தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றது. செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி, தங்களது முதல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட தயாராகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, வீரர்களின் ஹேர்ஸ்டைல்கள் சமூக வலைதளங்களில் தலைப்பு  செய்தியாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

HARDIK PANDYA’s NEW HAIRSTYLE  pic.twitter.com/V511cW6LCd

— Johns. (@CricCrazyJohns) September 5, 2025

ஹர்திக் பாண்டியா புதிய தோற்றம்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, தனது தலைமுடிக்கு ப்ளீச் செய்து பொன்னிறமான கலரில் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். அவரது இந்த மாற்றம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு இந்திய நட்சத்திர வீரர் சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சூரியகுமார் யாதவ் முடி நிறம் மாற்றம்?

இந்திய அணியின்  கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான சூரியகுமார் யாதவ், இளஞ்சிவப்பு நிற முடியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கின. இந்திய அணியின் கேப்டனான சூர்யாகுமார் யாதவ் உண்மையில் இந்த மாற்றத்தை செய்தாரா? அல்லது ஹர்திக் பாண்டியாவை பின்பற்றி, தனது ஹேர்ஸ்டைலை மாற்றினாரா? என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். இது உண்மை தானா? அல்லது போலியா என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவியது. இந்நிலையில் வைரலான அந்த புகைப்படம் முற்றிலும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.

சூரியகுமார் யாதவ் இளஞ்சிவப்பு நிற முடியுடன் இருப்பது போல் பரவிய புகைப்படம், டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தனது இயற்கையான கருப்பு நிற முடியுடன் தான் இருக்கிறார் என்றும், முடிக்கு எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூரியகுமார் யாதவ் தனது வழக்கமான கருப்பு நிற முடியுடன், துபாய் விமான நிலையத்தில் வந்திறங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

காத்திருக்கும் சவால்கள்

சமூக வலைதளங்கள் ஹேர்ஸ்டைல் சர்ச்சைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், சூரியகுமார் யாதவுக்கு முன்னால் உண்மையான சவால்கள் காத்திருக்கின்றன. இந்த ஆசிய கோப்பை, அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். ஒரு பெரிய தொடரில் இந்திய அணியை முதல் முறையாக வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், அவரது கேப்டன்சி மற்றும் தனிப்பட்ட செயல்பாடு, 2026 டி20 உலக கோப்பையை மனதில் கொண்டு கூர்ந்து கவனிக்கப்படும். அந்த உலக கோப்பையிலும் அவரே கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.