அணுசக்தி கப்பல், லேசர், ஏஐ ஆயுதங்கள்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசின் மிகப் பெரிய திட்டம்

புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும் அடங்கும். ​காஷ்மீரின் பஹல்​காமில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர்.

அதற்கு பதிலடி​யாக இந்​திய பாது​காப்பு படை ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் அதிரடி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் பாகிஸ்​தான் எல்​லை​யில் இருந்த 9 தீவிர​வாத முகாம்​கள், பாகிஸ்​தானின் விமான தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. இதையடுத்து இந்​திய பாது​காப்​புப் படைகளை மேலும் பலம் வாய்ந்​த​தாக மேம்​படுத்த பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு 15 ஆண்டு திட்​டத்தை கொண்டு வந்​துள்​ளது.

இதில் அணு ஆயுதங்​களை ஏந்​திச் செல்​லும் நீர்​மூழ்கி கப்​பல்​கள், அடுத்த தலை​முறைக்​கான பீரங்​கி​கள், ஹைபர்​சோனிக் ஏவு​கணை​கள், அதிநவீன குண்​டு​களை வீசும் ட்ரோன்​கள், ஏஐ தொழில்​நுட்​பத்​தில் செயல்​படும் ஆயுதங்​கள், விண்​வெளி சார்ந்த போர் தொழில்​நுட்​பங்​கள் மேம்​படுத்​தப்பட உள்​ளன.

இந்​தத் திட்​டத்தை 15 ஆண்​டு​களில் செய்து முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தியா சுதந்​திரம் அடைந்த பிறகு முதல் முறை​யாக இது​போன்ற மிகப்​பெரிய பாது​காப்​புத் துறை மேம்​பாட்​டுக்​கான திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை செயல்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகளை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சகம் தொடங்​கி​விட்​டது. இதற்​காக கோடிக்​கணக்​கில் பணம் செல​விடப்பட உள்​ளது.

இதற்​கான திட்ட அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்ள விவரம்: புதிய திட்​டத்​தின்​படி டி-72 பீரங்​கி​களுக்கு பதில் ராணுவத்​தில் கூடு​தலாக 1,800 அடுத்த தலை​முறை பீரங்​கி​கள் இணைக்​கப்​படும். அத்​துடன் மலைப் பகு​தி​களில் போரிட 400 இலகு ரக பீரங்​கி​கள், பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை​கள், 700 ரோபோட்​டிக் தாக்​குதல் ஆயுதங்​கள் ராணுவத்​துக்கு கிடைக்​கும்.

கப்​பற்​படை​யில் புதி​தாக விமானம் தாங்கி போர்க் கப்​பல் இணைக்​கப்​படும். அத்​துடன் அடுத்த தலை​முறைக்​கான 10 போர்க் கப்​பல்​கள், அதி​விரை​வாக செல்​லும் சிறிய ரக போர்க் கப்​பல்​கள், செயற்​கைக் கோள்​கள், 150 தாக்​குதல் ட்ரோன்​கள், ரிமோட் மூலம் இயக்​கப்​படும் 100 சிறிய ரக விமானங்​கள் கப்​பற்​படைக்கு கிடைக்​கும்.

21-ம் நூற்​றாண்​டில் எந்த அச்​சுறுத்​தல் வந்​தா​லும், அவற்றை சமாளிக்​கும் வகை​யில் ஏஐ, தொழில்​நுட்​பத்​துடன் கூடிய ஆயுதங்​கள் உற்​பத்​திக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அந்த திட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக தனி​யார்​ செய்​தி நிறு​வனம்​ தகவல்​ வெளி​யிட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.